அஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்!

  • IndiaGlitz, [Sunday,April 18 2021]

அஜீத், சூர்யா உள்பட ஒருசில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஜீத் நடித்த ’அசல்’ சூர்யா நடித்த ’வாரணம் ஆயிரம்’ விஷால் நடித்த ’வெடி’ மாதவன் ஆர்யா நடித்த ’வேட்டை’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் கடவுள் கிருபையால் தனது குழந்தைகள் நலமாக இருக்கிறார்கள் என்றும் தான் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் அனைவரும் மன உறுதியுடன் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சமீரா ரெட்டி கடந்த 2014ஆம் ஆண்டு அக்சய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.