ரசிகர்களுக்காக பல வருட கொள்கையை மாற்றி கொண்ட அஜித்: அப்படி என்ன செய்தார்?

அஜித் தான் நீண்ட வருடங்களாக கடைபிடித்துவரும் ஒரு கொள்கையை தனது ரசிகர்களுக்காக மாற்றி அமைத்து கொண்டதாக செய்திகள் வெளியாகிஉள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கான கதையை கேட்டு முடிவு செய்வார் என்பது பல வருடங்களாக அவர் கடைபிடித்துவரும் கொள்கையாக உள்ளது.

இந்த நிலையில் ’அஜீத் 61’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’அஜித் 62’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ‘அஜித் 63’ மற்றும் ’அஜித் 64’ படங்கள் குறித்த முடிவையும் அவர் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அஜித்தின் 63வது படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். ’வீரம்’, ’வேதாளம்’, ’விவேகம்’ மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய நான்கு படங்களை அடுத்து ஐந்தாவது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ளார்.

இதனை அடுத்து அஜித்தின் 64வது படத்தை ’8 தோட்டாக்கள்’ இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்க இருப்பதாகவும் இது ஒரு மதுரை கேங்ஸ்டர் ஒருவரின் கதை என்றும் இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

More News

'தளபதி 66' பூஜையுடன் படப்பிடிப்பும் தொடக்கம்: மாஸ் புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்தது என்பதும் இந்த பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, தமன் உள்பட படக்குழுவினர்

'பீஸ்ட்' விஜய்யா? 'பூவே உனக்காக' விஜய்யா?  காலம் தான் பதில் சொல்லும்: விஜய் பேட்டி 

'பீஸ்ட்' விஜய் வேண்டுமா இல்லை 'பூவே உனக்காக' விஜய் வேண்டுமா என்பதை காலம் நேரம் தான் முடிவு செய்யும் என விஜய் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

25 வயது இளம்பெண்ணுடன் திருமணம்: 45 வயது விவசாயிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 45 வயது விவசாயிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெங்கட்பிரபுவின் அடுத்த பட ஹீரோ அறிவிப்பு!

 தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'மாநாடு' மற்றும் 'மன்மதலீலை' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது என்பது தெரிந்ததே.

கிருத்திகா உதயநிதியின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக், சிங்கிள் பாடல் ரிலீஸ்!

இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஏற்கனவே 'வணக்கம் சென்னை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய நிலையில் அவர் ஒரு வெப்தொடரை இயக்கி வருவதாக செய்திகள் வெளியானது.