வெளிநாட்டில் இருந்தாலும் மறக்க முடியாத பரிசு.. ஷாலினி பிறந்த நாளில் அஜித் சர்ப்ரைஸ்..!

  • IndiaGlitz, [Friday,November 22 2024]

அஜித்தின் மனைவி ஷாலினி சமீபத்தில் தனது 44வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் அஜித், தனது காதல் மனைவிக்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்ததாக வெளியான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த போது ஏற்பட்ட காதலின் பின்னர், இரு குடும்பங்களின் சம்மதத்துடன் 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஷாலினி சமீபத்தில் தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஷாலினியின் சகோதரர், மகன், மகள் மற்றும் சகோதரி ஆகியோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அஜித் தற்போது, வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் ஷாலினி விலை உயர்ந்த லெக்சஸ் காரின் முன்னால் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காரை, தனது காதல் மனைவிக்கு சர்பிரைஸ் ஆக பிறந்த நாள் பரிசாக அஜித் கொடுத்ததாக கூறப்படுகிறது.

More News

கீர்த்தி சுரேஷை அடுத்து தமன்னா.. திருமணத்திற்கு செய்யும் முன்னேற்பாடுகள்..!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து தகவல் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக

ரஜினி-சீமான் திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் திடீர் திருப்பமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே திருமண விழாவில் கலந்து கொண்ட தனுஷ் - நயன்தாரா.. நேருக்கு நேர் சந்தித்தார்களா?

இன்று நடைபெற்ற தயாரிப்பாளரின் திருமண விழாவில், தனுஷ் மற்றும் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிஆர்பியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் சன் டிவி தொடர்கள்.. தப்பித்தது 'சிறகடிக்க ஆசை' மட்டுமே..!

சன் டிவி, விஜய் டிவி, ஜீடிவி ஆகிய தொலைக்காட்சிகளில் தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை டிஆர்பி பட்டியல்

நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷ், ஐஸ்வர்யா.. விவாகரத்து வழக்கின் தீர்ப்பு எப்போது?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு