வெளிநாட்டில் இருந்தாலும் மறக்க முடியாத பரிசு.. ஷாலினி பிறந்த நாளில் அஜித் சர்ப்ரைஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் மனைவி ஷாலினி சமீபத்தில் தனது 44வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் அஜித், தனது காதல் மனைவிக்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்ததாக வெளியான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் "அமர்க்களம்" என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த போது ஏற்பட்ட காதலின் பின்னர், இரு குடும்பங்களின் சம்மதத்துடன் 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஷாலினி சமீபத்தில் தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஷாலினியின் சகோதரர், மகன், மகள் மற்றும் சகோதரி ஆகியோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அஜித் தற்போது, வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் ஷாலினி விலை உயர்ந்த லெக்சஸ் காரின் முன்னால் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காரை, தனது காதல் மனைவிக்கு சர்பிரைஸ் ஆக பிறந்த நாள் பரிசாக அஜித் கொடுத்ததாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com