அஜீத், சூர்யா, தனுஷ் வரிசையில் ஆர்யா இணைவாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகை பொருத்தவரை எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் மற்றும் ரஜினி ஆகியோர் 150 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை செய்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த நடிகர்கள் பல ஆண்டுகளாக திரையுலகில் முடிசூடா மன்னன்களாக இருந்தனர், இருக்கின்றனர். வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்தாலும் ஒரு ஹீரோ 100 படங்களில் நடித்து முடிக்க 50 வருடங்கள் ஃபீல்டில் இருந்தாக வேண்டும். ஆனால் அது தற்போது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் ஒரு நடிகர் 50 படங்களை தொடுவது என்பதே ஒரு பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அஜீத், விஜய் ஆகியோர் மட்டுமே தற்போது ஐம்பது படங்களை தாண்டியுள்ளனர். எனவே தற்போது ஒரு நடிகருக்கு 25வது மற்றும் 50 வது படம் என்பது ஒரு முக்கிய படமாக கருதப்படுகிறது.
அஜீத்தின் 25வது படமான அமர்க்களம், சூர்யாவின் 25வது படமான 'சிங்கம்' மற்றும் தனுஷின் 25வது படமான 'வேலையில்லா பட்டதாரி' ஆகிய மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், இந்த பட்டியலில் ஆர்யாவும் தனது 25வது படத்தை வெற்றிப்படமாக்க விரும்புகிறார். விரைவில் ஆர்யா நடித்து முடித்துள்ள 25வது படமான 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. அஜீத், சூர்யா, தனுஷ் வரிசையில் தன்னுடைய 25வது படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்ற நோக்கத்தில் மிகுந்த கவனத்துடன் கதையை தேர்வு செய்து ஆர்யா நடித்து முடித்துள்ளார்.
ஆர்யா, தமன்னா, சந்தானம், பானு, கருணாகரன், வித்யூலேகா, நடித்துள்ள இந்த படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய மூன்று தொடர் வெற்றிகளை கொடுத்த எம்.ராஜேஷுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள ஆர்யாவுக்கு 25வது படம் வெற்றிப்படமாக அமைந்திட நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com