அஜித்துக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுத்தாரா போனிகபூர்?

  • IndiaGlitz, [Wednesday,July 10 2019]

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தையும் எச்.வினோத் இயக்கும் இன்னொரு படத்தையும் போனிகபூர் தயாரிக்கின்றார் என்பதும் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து அஜித்துடன் போனிகபூர் ஒரு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் வெளிவந்த செய்தி அனைவரும் அறிந்ததே

ஆனால், உண்மையில் அஜித் நடிக்கும் மூன்று படங்களை தயாரிக்க போனிகபூர் ஒப்பந்தம் செய்ததாகவும், மூன்று படத்திற்கும் சேர்த்து அவர் அஜித்துக்கு ரூ.100 கோடி சம்பளம் தர ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தற்போது ஒரு செய்தி வெளிவந்துள்ளது

நேர் கொண்ட பார்வை, எச்.வினோத்தின் அதிரடி ஆக்சன் படம் என இரண்டு படங்களை அடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படமும் போனிகபூரின் தயாரிப்பு தான் என்றும், இந்த படம் ஒரு பெரிய பட்ஜெட் பாலிவுட் படம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை பாலிவுட்டிற்கு அழைத்து வருவேன் என்று போனிகபூர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் தொடர்ந்து ஒரே தயாரிப்பாளருக்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் நடித்து கொடுப்பது புதியதல்ல. ஏற்கனவே வேதாளம், என்னை அறிந்தால் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்களுக்கும், விவேகம், விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நடித்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியால் அஜித் படத்திற்கு சிக்கலா?

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபிராமியால்,

பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆக்கும் ஜெய் பட நாயகி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3ஆம் பாகம் சமீபத்தில் ஆரம்பித்து சண்டை, சச்சரவு, ரொமான்ஸ் ஆகியவற்றுடன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது.

சுசீந்திரனின் 'கென்னடி கிளப்' சென்சார் தகவல்கள்

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. விஜய் நடித்த 'கில்லி' முதல் 'பிகில்' வரை பல ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் தமிழில் தயாராகி வரும் நிலையில்

செல்பி இருந்தால்தான் அட்டெண்டன்ஸ்: பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய விதி

காலை 8 மணிக்கு பள்ளிக்கு வருகை தந்து ஆசிரியர்கள் அவரவர் வகுப்பறை முன் செல்பி எடுத்து அனுப்பினால் மட்டுமே அவர்களுடைய வருகைப்பதிவேடு உறுதி செய்யப்படும்

ஆன்ட்டியுடன் ரொமான்ஸ் செய்யும் தர்ஷன்

பிக்பாஸ் வீட்டில் ஒருபக்கம் சண்டை, சச்சரவு என தினமும் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் ரொமான்ஸூக்கும் பஞ்சமில்லை. ஒருபக்கம் கவின் நான்கு பெண்களிடம்