தந்தையின் இறுதிச்சடங்கு: அஜித்தின் முக்கிய அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் தந்தை இன்று காலை காலமான நிலையில் அஜித்தின் தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது.
அஜித்தின் தந்தை சுப்ரமணியன் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் எங்கள் தந்தையின் இறுதி சடங்கு நிகழ்வு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம் என்று அஜித்தின் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் இழப்பை புரிந்து கொண்டு இறுதி சடங்கை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்க வேண்டுகிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித் தந்தையின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.
தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
அனுப் குமார், அஜீத் குமார், அனில்குமார்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout