ஒருவழியாக கிளம்பிவிட்டார் அஜித்.. 'விடாமுயற்சி' படத்திற்கு கிடைத்த விமோசனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து ஒரு வழியாக இந்த படம் விரைவில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித், எச் வினோத் இயக்கத்தில் ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ மற்றும் ’துணிவு’ ஆகிய மூன்று படங்களில் நடித்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் அதன் பின்னர் விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படம் உருவாக இருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் முழுமையாக ஆகியும் தற்போது 70 முதல் 80 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே நடந்து முடிந்திருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்க இருப்பதை அடுத்து இன்று அஜித் அஜர்பைஜானுக்கு கிளம்பியுள்ளார். அவரது விமான நிலைய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படத்திற்கு விமோசனம் கிடைத்துவிட்டது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
Ajith sir left for the #VidaaMuyarchi shooting today.
— Ajith | Dark Devil (@ajithFC) June 19, 2024
| #Ak #Ajith #AjithKumar | #GoodBadUgly | pic.twitter.com/8WSLaeWcsS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments