'விடாமுயற்சி': படப்பிடிப்பு முடியும் முன்பே முக்கிய பணியை தொடங்கிய அஜித்..!
- IndiaGlitz, [Thursday,December 05 2024]
அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டாலும் இன்னும் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மற்றும் சில காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. டிசம்பர் 13ஆம் தேதி முதல் இறுதி கட்ட பாடல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதன் பின் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தில் ’விடாமுயற்சி’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில் தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக அஜித் தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்கிவிட்டதாகவும், பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடியும் முன்பே டப்பிங் பணியை முடித்து விட அவர் முடிவு செய்திருப்பவர் அவர்கள் கூறப்படுகிறது.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.