'வேதாளம்' டப்பிங்கை தொடங்கினார் அஜீத்

  • IndiaGlitz, [Monday,October 12 2015]

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் கடந்த வாரம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ஒரு சுனாமியை கிளப்பிய நிலையில், அஜீத் இந்த படத்திற்கான டப்பிங் பணியை ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டீசருக்காக டப்பிங் செய்யபட்ட அதே ரிக்கார்டிங் ஸ்டுடியோவில்தான் அஜீத் டப்பிங் செய்துவருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், வித்யூலேகா, தம்பி ராமையா, சூரி உள்பட இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாகவும், அஜீத்தின் டப்பிங் முடிந்த பிறகு, அனிருத் பின்னணி இசைப்பணியை தொடங்கிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. தீபாவளிக்கு 'வேதாளம்' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத்தின் இசையமைப்பில் ஏ.எம்.ரத்னம் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ளது.