ஆர்.கே.சுரேஷ் படத்தில் அஜித் பாடல்

  • IndiaGlitz, [Thursday,November 02 2017]

கோலிவுட் திரையுலக நடிகர்களின் பல படங்களில் தல அஜித்தின் பாடல்கள், போஸ்டர்கள், பேனர்கள் இணைக்கப்பட்டு வந்து கொண்டிருப்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் இந்த நிலையில் தற்போது ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் 'பில்லா பாண்டி' படத்தில் தல அஜித் குறித்து ஒரு முழு பாடலே உள்ளது.

ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் 'பில்லா பாண்டி' படத்தில் தல பெருமை குறித்து ஒரு பாடல் உள்ளதாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'எங்க குல தங்கம், எங்க தல சிங்கம்' என்று தொடங்கும் இந்த பாடலை கல்யாண் மாஸ்டர் நடனப்பயிற்சி அமைக்க ஆர்.கே.சுரேஷ் குழுவினர் நடனம் ஆடும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல் உள்பட இந்த படத்தின் பாடல்கள் வரும் டிசம்பரில் வெளிவரும் என்றும் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.

பில்லா பாண்டி' படத்தில் அஜித் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்து வருகிறார் என்பதும், அஜித்தின் முகத்தை டாட்டூவாக அவர் தனது உடலில் வரைந்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சரவணஷக்தி இயக்கி வருகிறார். இளையவன் இசையில் ஜீவன் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

More News

வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் மெர்சல்'  வசூல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் வசூல் 100 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை

கொடுங்கையூர் கொடுஞ்சாவிற்கு கமல்ஹாசன் கண்டனம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தும்

பிரபல தமிழ் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: தாயார் குற்றச்சாட்டு

மனுநீதி, சூப்பர் குடும்பம், தவசி, காதல் பூக்கள், சவுண்ட் பார்ட்டி ஆகிய தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை பிரதியூஷா. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார்

கோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1

கோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1

கனமழை எதிரொலி: தீரன் அதிகாரம் ஒன்று இசை விழாவில் திடீர் மாற்றம்

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் உருவாகியுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இசை விழா நாளை சென்னையில் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.