மீண்டும் காக்கி சட்டை அணிகிறாரா அஜித்?

  • IndiaGlitz, [Sunday,October 15 2017]

அஜித் நடித்த சர்வதேச உளவாளி படமான 'விவேகம்' 50வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான 'அஜித் 58' படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அஜித் 58' படத்தை மீண்டும் இயக்குனர் சிவா இயக்கவுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டாலும் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை

இந்த நிலையில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள நான்காவது அஜித் படம் ஒரு போலீஸ் படம் என்றும், ஆஞ்சநேயா, மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களுக்கு பின்னர் அஜித் நான்காவது முறையாக காக்கி சட்டை அணியவிருப்பதாகவும் தற்போது வெளிவந்துள்ள செய்திகள் கூறுகின்றன.

இயக்குனர் சிவாவின் முதல் படம் 'சிறுத்தை' போலீஸ் படம் என்பதும் அந்த படம் நல்ல வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் அவர் போலீஸ் படம் இயக்கினார் அந்த படம் மாஸ் ஆக அஜித்துக்கு அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பிரச்சனையை சமாளிக்க 'மெர்சல்' குழுவின் கடைசிகட்ட அதிரடி நடவடிக்கை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கிவிட்டது.

சந்தானம் படத்தில் கூடுதலாக 2 ஆக்சன் காட்சிகள் ஏன்: இயக்குனர் எம்.ராஜேஷ்

காமெடி நடிகரில் இருந்து ஆக்சன் ஹீரோவாக மாறியுள்ள சந்தானம் சமீபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் ரியல் ஆக்ச்னிலும் ஈடுபட்டார்.

சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் அஜித், விஜய்யை அடுத்து மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை கொடுத்து வருகின்றன.

விஜய்க்கு 'தமிழாலே ஒன்றானோம்', ஜி.வி.பிரகாஷுக்கு 'தமிழானோம்'

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் 'தமிழாலே ஒன்றானோம்' என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் தமிழுக்காக 'தமிழானோம்' என்று தொடங்கும் பாடலை ஜி.வி.பிரகாஷ் இயற்றி வருகிறார்.

ஆக்சன் ஹீரோ என்பதை சந்தானம் நிரூபித்துவிட்டார். ஆர்யா

சந்தானம் ஹீரோவாக நடித்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சந்தானம், இசையமைப்பாளர் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.