அஜீத்-ஸ்ருதிஹாசன் துபாய் பயணம்

  • IndiaGlitz, [Thursday,July 02 2015]

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக 'தல 56' குழுவினர் அனைவரும் இவ்வார இறுதியில் துபாய் பயணம் செய்யவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாய் சென்று லோகேஷன் பார்த்துவிட்டு வந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், துபாயில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் அடுத்த மாதம் துபாய் படப்பிடிப்பை நடத்தலாம் என்ற முடிவில் இருந்ததாகவும், ஆனால் படத்தை தீபாவளி தினத்தின் ரிலீஸ் செய்ய வேண்டியதுள்ளதால் படப்பிடிப்பை தாமதிக்க விரும்பாத சிறுத்தை சிவா, உடனே துபாய் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என கூறியதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

லட்சுமி மேனனுடன் முதல்கட்ட படபிடிப்பும், கபீர்சிங் உடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட அஜீத், இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசனுடன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. துபாய் படப்பிடிப்பு முடிவடைந்ததும், ஒரு நீண்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவுள்ளதாகவும், கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், சூரி, லட்சுமி மேனன், கபீர்சிங் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.