'தல 56' படத்தின் வியாபாரம் தொடங்கியது

  • IndiaGlitz, [Wednesday,September 02 2015]

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு உறுதியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தின் வியாபாரம் ஆரம்பமாகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பெரும் பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ள ஏ.எம்.ரத்னம், முதல்கட்டமாக வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை பாண்டிச்சேரி சுரேஷ் அவர்களுக்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மற்ற ஏரியாக்களின் ரிலீஸ் உரிமைகளும் விரைவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமிமேனனும் நடித்துள்ள இந்த படத்தில் கபீர்சிங், ராகுல்தேவ் ஆகிய இருவரும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மற்றும் அஸ்வின், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில், டீசர் ரிலீஸ் தேதி, இசை வெளியீட்டு தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தனுஷின் இரண்டு படங்களை கைப்பற்றியது லைகா நிறுவனம்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்துடன் தனுஷ் தயாரித்த 'நானும் ரெளடிதான்' ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

21 வருடங்கள் கழித்து தெலுங்கில் ரீ- எண்ட்ரி ஆகும் மோகன்லால்

இளையதளபதி விஜய்யுடன் மலையாள சூப்பர் ஸ்டார் நடித்த 'ஜில்லா' திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல ...

தரமான வெற்றி பெற்ற தனி ஒருவனின் ரகசியம்

சமீபகாலங்களில் ஒரு படத்தின் விளம்பரத்திற்கு பலவிதமான டெக்னிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமுக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ஹேஷ்டேக்குகள் உருவாக்கி...

ஆர்யாவின் 'இஞ்சி இடுப்பழகி'யில் கமல்-ரேவதி?

ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த வாரம்...

தமிழில் டப் ஆகும் மீரா ஜாஸ்மினின் மலையாள படம்

சமீபகாலமாக மலையாளத்தில் வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன..