close
Choose your channels

தல 56': கொல்கத்தா படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

Sunday, September 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு மால் மற்றும் தனியார் மருத்துவமனையில் நடைபெற்றதை அடுத்து, படக்குழுவினர் சமீபத்தில் கொல்கத்தாவுக்கு சென்றனர். ஏற்கனவே கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும், இன்னும் ஒருசில காட்சிகளை படமாக்க படக்குழு கொல்கத்தா சென்றது.

இந்நிலையில் கொல்கத்தா படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜீத், ஸ்ருதிஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் நேற்றிரவு சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் சென்னையில் ஆரம்பமாகவுள்ளதாகவும், அத்துடன் இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'தல 56' திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களின் ரிலீஸ் உரிமைகளும் விற்பனையாகிவிட்டதே இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கோவை ரிலீஸ் உரிமை ரூ.6.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 'தல 56' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment