நள்ளிரவில் படமாகும் 'தல 56' கிளைமாக்ஸ்

  • IndiaGlitz, [Wednesday,September 02 2015]

அஜீத் நடித்து வரும் 'தல56' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள மால் ஒன்றிலும், தனியார் மருத்துவமனை ஒன்றிலும் நடந்து முடிந்த நிலையில் தற்போது கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் ஆரம்பமாகியுள்ளது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இரவு நேரத்தில் நடைபெறும் வகையில் கதையில் அமைந்திருப்பதால் மாலை 6 ஆறுமணி முதல் நள்ளிரவு வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரம் இதேபோன்று இரவில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் கிளைமாக்ஸ் காட்சி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு பின்னர் ஸ்ருதிஹாசன் மற்றும் லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட ஒருசில வசனக்காட்சிகளும், ஒரே ஒரு பாடல் காட்சியும் மட்டுமே மீதமுள்ளது என்றும் அந்த காட்சிகளும் விரைவில் முடிக்கப்படும் என்றும் இயக்குனர் சி|றுத்தை சிவா தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

ஏ.எம்.ரத்னம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின், சூரி, கபீர்சிங், ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல்பாதியின் முற்றிலும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. வரும் தீபாவளி திருநாளில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அறிமுக இயக்குனருடன் ரீ-எண்ட்ரி ஆகும் நமீதா

விஜய்யுடன் 'அழகிய தமிழ்மகன்', அஜீத்துடன் 'பில்லா' உள்பட பல படங்களில் நடித்து ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக...

'தல 56' படத்தின் வியாபாரம் தொடங்கியது

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது....

தனுஷின் இரண்டு படங்களை கைப்பற்றியது லைகா நிறுவனம்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்துடன் தனுஷ் தயாரித்த 'நானும் ரெளடிதான்' ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

21 வருடங்கள் கழித்து தெலுங்கில் ரீ- எண்ட்ரி ஆகும் மோகன்லால்

இளையதளபதி விஜய்யுடன் மலையாள சூப்பர் ஸ்டார் நடித்த 'ஜில்லா' திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல ...

தரமான வெற்றி பெற்ற தனி ஒருவனின் ரகசியம்

சமீபகாலங்களில் ஒரு படத்தின் விளம்பரத்திற்கு பலவிதமான டெக்னிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமுக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ஹேஷ்டேக்குகள் உருவாக்கி...