நாளை அஜீத்-ஸ்ருதிஹாசன் கொல்கத்தா பயணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் நாளை மறுநாள் முதல் நான்காவது கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக படக்குழுவினர் நாளை கொல்கத்தா புறப்பட தயாராகி வருகின்றனர்.
சென்னையில் அஜீத்-லட்சுமி மேனன் படப்பிடிப்பும், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் அஜீத்-ஸ்ருதிஹாசன் காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், படத்தின் முக்கிய காட்சிகளை கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் சிறுத்தை சிவா, ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் வரும் திங்கள் முதல் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதால், அஜீத், ஸ்ருதிஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் நாளை கொல்கத்தா செல்லவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கொல்கத்தா படப்பிடிப்புடன் 'தல 56' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும், இந்த படத்தை திட்டமிட்டபடி, வரும் தீபாவளி தினத்தில் வெளியிட அனைத்து முயற்சிகளும் தீவிரமாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தரப்பில் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர் சிங் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments