கால்பந்து போட்டியை ரசித்து பார்க்கும் அஜித்.. அவரே எடுத்த செல்பி வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித் லண்டனில் கால்பந்து போட்டியை ரசித்து பார்க்கும் செல்பி வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், 'விடாமுயற்சி’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற அஜித், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் என்பதும், அவை இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில், லண்டனில் நடந்த ஒரு கால்பந்து போட்டியை நேரடியாக பார்க்கச் சென்று அஜித் மைதானத்தில் இருந்து எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, அஜித் மனைவி ஷாலினி , கடந்த சில நாட்களுக்கு முன் மகன் ஆத்விக் உடன் கால்பந்து போட்டியை ரசித்த புகைப்படத்தை, வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அஜித் அதே போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Exclusive Selfie Video Of THALA AJITH While Watching the FIFA Match At Stamford Bridge West London 🏴⚽️
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) October 15, 2024
Our Man is Super Excited 🤩✨#AjithKumar | #GoodBadUgly| #Vidaamuyarchi pic.twitter.com/Wvw9Cwwo9h
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com