இப்ப தெரியுதா? நான் ஏன் அவரை விடலைன்னு.. சூர்யாவுக்கு அஜித் சொன்ன ரகசியம்..!

  • IndiaGlitz, [Tuesday,October 22 2024]

நடிகர் அஜித்தை தான் சமீபத்தில் சந்தித்ததாகவும், அப்போது அவர், இப்போ தெரியுதா, நான் ஏன் அவரை விடவில்லை என்று? என்று அஜித் தன்னிடம் கூறியதாகவும் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்காக நாடு முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதோடு, சூர்யா உள்பட படக்குழுவினர் மும்பை, டெல்லி என வட மாநிலங்களில் தற்போது ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வட இந்திய ப்ரமோஷன் பணிகளின் போது பேட்டி அளித்த சூர்யா, சமீபத்தில் தான் அஜித்தை சந்தித்ததாகவும், அப்போது அவர், இப்போ தெரியுதா, நான் ஏன் சிவா சாரை விடவில்லை என்று? என்று கூறியதாகவும் தெரிவித்தார். சிவா இயக்கத்தில் உருவான ஒவ்வொரு படத்தையும் அஜித் மிகவும் ரசித்து நடித்தார் என்றும், திரையில் அந்த படங்கள் கொண்டாடப்பட்டதாகவும் சூர்யா தெரிவித்தார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் இதுவரை ’வீரம்’, ’வேதாளம்’, ’விவேகம்’, ’விஸ்வாசம்’ என நான்கு படங்களில் தொடர்ச்சியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அஜித் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் சிறுத்தை சிவா உடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

இந்த ஒரு திரைப்படம் என் வாழ்க்கையையே மாற்றியது: நயன்தாராவின் நெகிழ்ச்சி பதிவு..!

நடிகை நயன்தாரா தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நிலையில், "நானும் ரவுடி தான்" படம் தனது திரையுலக வாழ்க்கையையும், தனிப்பட்ட

காலை 6 மணிக்கே படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்.. எந்த ஹீரோ படம்?

நடிகை மாளவிகா மோகனன் காலை 6:34 மணிக்கு பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதற்காக சென்றதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் கெட்டப்பை மாற்ற ஸ்பென்சர் பிளாசாவில் வாங்கிய பொருட்கள்: பட்டியல் போட்ட இயக்குனர்..!

சிம்புவின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடைய கெட்டப்பை மாற்றுவதற்காக சென்னை ஸ்பென்சர்

அஜித் குமார் ரேசிங் டீம் லோகோ ரிலீஸ்.. அணியின் முதன்மை ஓட்டுனர் யார் தெரியுமா?

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஒரு ரேசிங் டீம் உருவாக்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த டீமின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரிம் செய்யப்பட்ட 18 நிமிடங்களை சேர்த்து பார்க்கலாம்.. 'மெய்யழகன்' ஓடிடி ரிலீஸ் தேதி..!

கார்த்தி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன சில நாட்களில், 18 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஓடிடியில் ட்ரிம் செய்யப்பட்ட காட்சிகளையும் சேர்த்து பார்க்கலாம்