இப்ப தெரியுதா? நான் ஏன் அவரை விடலைன்னு.. சூர்யாவுக்கு அஜித் சொன்ன ரகசியம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித்தை தான் சமீபத்தில் சந்தித்ததாகவும், அப்போது அவர், "இப்போ தெரியுதா, நான் ஏன் அவரை விடவில்லை என்று?" என்று அஜித் தன்னிடம் கூறியதாகவும் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்காக நாடு முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதோடு, சூர்யா உள்பட படக்குழுவினர் மும்பை, டெல்லி என வட மாநிலங்களில் தற்போது ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வட இந்திய ப்ரமோஷன் பணிகளின் போது பேட்டி அளித்த சூர்யா, சமீபத்தில் தான் அஜித்தை சந்தித்ததாகவும், அப்போது அவர், "இப்போ தெரியுதா, நான் ஏன் சிவா சாரை விடவில்லை என்று?" என்று கூறியதாகவும் தெரிவித்தார். சிவா இயக்கத்தில் உருவான ஒவ்வொரு படத்தையும் அஜித் மிகவும் ரசித்து நடித்தார் என்றும், திரையில் அந்த படங்கள் கொண்டாடப்பட்டதாகவும் சூர்யா தெரிவித்தார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் இதுவரை ’வீரம்’, ’வேதாளம்’, ’விவேகம்’, ’விஸ்வாசம்’ என நான்கு படங்களில் தொடர்ச்சியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அஜித் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் சிறுத்தை சிவா உடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
.@Suriya_offl at #Kanguva’s promotional interview : I met #Ajith sir recently and he said to me “Ipo therithaa, Na en @directorsiva va vidala nu” 😀
— KARTHIK DP (@dp_karthik) October 22, 2024
Ajith sir loves theatre moments! 🔥pic.twitter.com/OeSU80cNBt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com