நீங்கள் மேம்பட்ட மனிதராக மாற வேண்டுமா? அஜித் சொன்ன பழமொழி: வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு மனிதன் மேம்பட்ட மனிதராக வேண்டுமென்றால், பயணம் செய்ய வேண்டும் என்று அஜித் கூறிய வீடியோ, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது: "நீங்கள் பயணம் செய்யும்போதுதான் மேம்பட்ட மனிதராக மாற முடியும். அதுதான் பயணத்தின் கருத்து. பயணம் தான் கல்வியின் சிறந்த வழி என நான் நினைக்கிறேன்.
ஒரு பழமொழி இருக்கிறது. அதில், 'நீங்கள் முன்பு பார்க்காத ஆள்களையும் உங்களது மதம் வெறுக்க வைக்கும்'. அது மதம், ஜாதி எதுவாக இருந்தாலும், அந்த பழமொழியில் வருவது உண்மை. நாம் மக்களை பார்க்காமல் கூட அவர்களை மதிப்பிடக்கூடும். ஆனால், நீங்கள் பயணம் செய்யும் போது பலவற்றை அனுபவிக்கலாம்.
நான் பயணத்தின் போது பல நாட்டைச் சேர்ந்தவர்கள், பல மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம் குறித்து அனுபவித்து இருக்கிறேன். அதனால், நீங்கள் மக்களை புரிந்து கொள்ள முடியும். பயணத்தால் உங்களைச் சுற்றியுள்ள மக்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அது உங்களை மேம்பட்ட மனிதராக மாற்றும்" என்று கூறியுள்ளார். அஜித்தின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் "விடாமுயற்சி" மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
திரைப்படங்கள் நடிப்பது மட்டுமின்றி, கார் மற்றும் பைக்குகள் மீதும் ஆர்வம் கொண்ட அஜித், உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி, பிரிட்டனில் நடைபெறும் GT4 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் கார் போட்டியிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Fueling passion for adventure! 🏍️ #AjithKumar on a thrilling journey with #VenusMotortours. Experience the best of Indian bike tours, where every ride is a story of freedom and speed! 🇮🇳✨@VenusMotoTours @Donechannel1 @Dubai_Autodrome#BikeTours pic.twitter.com/YwqKK7BiNF
— Suresh Chandra (@SureshChandraa) October 5, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout