நீங்கள் மேம்பட்ட மனிதராக மாற வேண்டுமா? அஜித் சொன்ன பழமொழி: வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Saturday,October 05 2024]

ஒரு மனிதன் மேம்பட்ட மனிதராக வேண்டுமென்றால், பயணம் செய்ய வேண்டும் என்று அஜித் கூறிய வீடியோ, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது: நீங்கள் பயணம் செய்யும்போதுதான் மேம்பட்ட மனிதராக மாற முடியும். அதுதான் பயணத்தின் கருத்து. பயணம் தான் கல்வியின் சிறந்த வழி என நான் நினைக்கிறேன்.

ஒரு பழமொழி இருக்கிறது. அதில், 'நீங்கள் முன்பு பார்க்காத ஆள்களையும் உங்களது மதம் வெறுக்க வைக்கும்'. அது மதம், ஜாதி எதுவாக இருந்தாலும், அந்த பழமொழியில் வருவது உண்மை. நாம் மக்களை பார்க்காமல் கூட அவர்களை மதிப்பிடக்கூடும். ஆனால், நீங்கள் பயணம் செய்யும் போது பலவற்றை அனுபவிக்கலாம்.

நான் பயணத்தின் போது பல நாட்டைச் சேர்ந்தவர்கள், பல மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம் குறித்து அனுபவித்து இருக்கிறேன். அதனால், நீங்கள் மக்களை புரிந்து கொள்ள முடியும். பயணத்தால் உங்களைச் சுற்றியுள்ள மக்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அது உங்களை மேம்பட்ட மனிதராக மாற்றும் என்று கூறியுள்ளார். அஜித்தின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்கள் நடிப்பது மட்டுமின்றி, கார் மற்றும் பைக்குகள் மீதும் ஆர்வம் கொண்ட அஜித், உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி, பிரிட்டனில் நடைபெறும் GT4 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் கார் போட்டியிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கிறார்

'தளபதி 69' படத்தில் 'டாப் குக்கு டூப் குக்கு பிரபலம்.. கனவு நனவானதாக நெகிழ்ச்சி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 69' படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் 'குக் வித் கோமாளி மற்றும்

'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்தால் உங்களுக்கு தான் ஓட்டு.. டிரம்ப் இடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்தால் உங்களுக்கு தான் எங்களது ஓட்டு என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப்  சமூக வலைதளத்தில் கமெண்ட்களாக மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள்

டிஆர்பியில் டாப் இடங்களை பிடித்த சன் டிவி தொடர்.. பின்னுக்கு தள்ளப்பட்ட 'சிறகடிக்க ஆசை'..!

சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்,

15 ஆண்டுக்கு பின் ஜீவாவுக்கு ஒரு 2ஆம் பாக படம்.. ஆனால் இது நடக்குமா?

ஜீவா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான நிலையில், 15 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்தி கசிந்துள்ளது.