பைக் ரேஸை கண்ணிமைக்காமல் பார்க்கும் தல அஜித்.. டிரெண்டிங் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,December 02 2024]

கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்சில் அதிக ஆர்வம் உள்ள அஜித், அது குறித்த வீடியோ அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும் என்பது தெரிந்தது.

இந்த நிலையில், 13 வினாடிகள் மட்டுமே ஓடும் பைக் ரேஸ் போட்டியை அஜித் ஆர்வத்துடன் பார்க்கும் வீடியோ இணையதளங்களில் பதிவாகியுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அஜித் கலந்து கொள்ளும் கார் ரேஸ் போட்டியின் வீடியோவையும் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.

இது வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா, ரெஜினா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், அஜித் நடித்துவரும் இன்னொரு திரைப்படம் குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திலும் அஜித்தின் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படமும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.