ஒரே படத்தில் மட்டுமே நடித்த 'காதல் மன்னன்' மானு.. இப்ப எப்படி இருக்கிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,March 08 2023]

அஜித் நடிப்பில் சரண் இயக்கத்தில் உருவான ’காதல் மன்னன்’ என்ற திரைப்படத்தில் நாயகி ஆக நடித்த நடிகை மானுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித் நடித்த ’காதல் மன்னன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை மானுவுக்கு வெறும் 16 வயது தான் என்பதும் இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்ற போது அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு வந்தபோதும் அவர் உலகம் முழுவதும் பரதநாட்டிய டூர் சென்றதால் வேறு படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘காதல் மன்னன்’ படத்துக்கு அடுத்து பல வருடங்கள் கழித்து ’என்ன சத்தம் என்றார் நேரம்’ என்ற திரைப்படத்தில் மட்டும் ஒரு சிறிய கேரக்டரில் மானு நடித்திருந்தார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்ட மானு தனது குடும்பத்துடன் அங்கேயே இருக்கிறார் என்பதும் சிங்கப்பூரில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற பிறகு போது அவருக்கு மருத்துவமனையில் பெரும் உதவிகளை செய்தது மானுதான் என்பதும் அப்போது ரஜினியுடன் மானு இருந்த புகைப்படம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை மானுவின் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்பட தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மானு அளித்த பேட்டியில் அஜித்துடன் நடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அஜித் ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்றும் அவருடன் நடிப்பதற்கு பாக்கியம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த பாக்கியம் எனக்கு இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல ஆண்டுகள் கழித்து இப்போதும் கூட ’காதல் மன்னன்’ திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் திலோத்தமா என்ற மானுவின் கேரக்டருக்கு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.