விஜய் ஒரு பிறவி டான்ஸர்: அஜித் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதாத நாள் இல்லை என்பதும் இந்த இரு நடிகர்களின் ரசிகர்கள் மோதலால் சமூக வலைத்தளங்கள் எப்போதும் பரபரப்பில் இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் அஜித்தும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இருவரும் ஒருவரது திறமையை இன்னொருவர் பாராட்ட தயங்கியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை நிரூபிக்கும் வகையில் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பின் இடையே நடந்த ஒரு சம்பவத்தை நடிகர் ரமேஷ் திலக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பின் இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித், கேரவனில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருந்ததாகவும் அப்போது ரமேஷ் திலக் அருகில் இருந்ததாகவும், அப்போது டிவியில் விஜய்யின் 'தெறி' படத்தின் பாடல் ஒன்று ஒளிபரப்பாகியதாகவும், இந்த பாடலில் விஜய்யின் நடனத்தை பார்த்து அஜித், 'விஜய் ஒரு பிறவி டான்சர், என்ன அசாட்டால சர்வ சாதாரண ஆடுகிறார்' என்றும் கூறினாராம்
அஜித், விஜய் இருவரும் மிகவும் நட்புடன் இருப்பதாகவும், அவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ரமேஷ் திலக் மேலும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments