அரசியலுக்கு 'நோ' சொன்ன தல அஜித்!

  • IndiaGlitz, [Tuesday,May 28 2019]

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 'தல 60' என்று அழைக்கப்படும் இந்த படத்தையும் எச்.வினோத் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் 'தல 60' படத்திற்காக அஜித்திடம் இயக்குனர் வினோத் இரண்டு கதைகளை கூறியுள்ளாராம். ஒன்று அரசியல் பின்னணி கொண்ட கதை. இன்னொன்று தற்போதைய சமுதாய பிரச்சனைக்கு தீர்வு அளிப்பது. இந்த இரண்டில் அரசியல் கதைக்கு நோ சொன்ன அஜித், சமுதாய பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் கதையை தேர்வு செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த நான்கு படங்களில் உடல் எடையுடன் கூடிய அஜித்தை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் ஸ்லிம் அஜித்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 

More News

நிருபரின் ஜாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமி: செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவரின் பெயர் என்ன? ஊர் என்ன? ஜாதி என்ன? என்று கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒன்றரை கோடி ரூபாயை சென்னை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்!

சென்னை சாலை ஒன்றில் நள்ளிரவில் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை மர்ம நபர் ஒருவர் சாலையில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பேயுடன் காதல் திருமணம்! இப்போது விவாகரத்து! அதிரவைக்கும் காரணம்!

அயர்லாந்து நாட்டை சேந்த பெண் ஒருவர், ஹாலிவுட் திரைப்படமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்" திரைப்படத்தில் வரும் ஜாக் ஸ்பேரோ என்கிற காதாபாத்திரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு...

கமல்ஹாசன் பெற்ற ஓட்டுக்கள் குறித்து ரஜினிகாந்த் கருத்து!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 4% வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையின் மூன்று தொகுதிகளிலும்

திரையரங்கு உரிமையாளர்களின் அதிரடி முடிவு: கமல், விஷால், கார்த்தி ஏற்பார்களா?

திரையரங்கு உரிமையாளர்கள் இனிவரும் காலங்களில் வசூல் தொகையை விநியோகிஸ்தர்களுக்கு பிரித்து கொடுப்பது குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.