குழந்தைகளுடன் சைக்கிள் ரைட் செய்த அஜித்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித் ஒரு மோட்டார் பைக் ரைடர் என்பதும் கார் ரேஸில் ஈடுபடுவதில் வல்லவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவர் குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
சின்னஞ்சிறு குழந்தைகளுடன் அஜித் சைக்கிள் ஓட்டுவதும், சைக்கிள் ஓட்டும்போது குழந்தைகளை நோக்கி மிகவும் அன்பாக அவர் கையசைப்பதும், குழந்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.
குழந்தைகளுடன் அஜித் சைக்கிள் ஓட்டும் இந்த காட்சியை பல ரசிகர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சமீபத்தில் லைகா சேர்மன் சுபாஷ்கரன் தெரிவித்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது ’விடாமுயற்சி’ படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாகவும் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்புக்கு இயக்குனர் மகிழ் திருமேனி தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
A video of Ajith sir cycling with kids.
— Ajith | Dark Devil (@ajithFC) August 26, 2023
| #AK #Ajith #Ajithkumar | #VidaaMuyarchi | pic.twitter.com/LnHED8uxoe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com