close
Choose your channels

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. 'விடாமுயற்சி' படப்பிடிப்பு என்ன ஆச்சு?

Friday, June 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜீத் தற்போது அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் திடீரென அவர் இந்தியா திரும்ப இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிய பின்னரும் இன்னும் படப்பிடிப்பு முடியாமல் இருப்பது அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் கடந்த சில மாதங்களாக ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தான் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த மாதம் வரை ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி திடீரென அஜித் ஜூலை 1ஆம் தேதி இந்தியா திரும்ப இருப்பதாகவும் அவர் ஒரு சில தனிப்பட்ட பணி காரணமாக இந்தியா வருவதாகவும் அந்த பணியை முடித்ததும் அவர் மீண்டும் அஜர்பைஜான் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.