close
Choose your channels

திடீரென சென்னை திரும்பினார் அஜித்.. மீண்டும் அஜர்பைஜான் செல்வாரா?

Tuesday, July 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை அவர் திடீர் என சென்னை திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் வெளியே வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பு குறித்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது என்பதும் குறிப்பாக கார் சூழலும் விடியோ ஒன்று இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அஜீத், அஜர்பைஜான் நாட்டில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுக்க போட்டி போட்ட காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

இந்த நிலையில் தனிப்பட்ட பணிக்காக அஜித் சென்னை திரும்பியுள்ளதாகவும் அந்த பணியை முடித்துவிட்டு அவர் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் அஜர்பைஜான் நாட்டிற்கு ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்காக செல்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் த்ரிஷா இணை இருப்பதாகவும் அஜித் , த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் காட்சிகளின் படப்பிடிப்பு வரும் நாட்களில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment