அந்த நடிகை கிட்ட பேசணும்.. மஞ்சுவாரியரிடம் கோரிக்கை வைத்த அஜித்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
13 வருடங்களுக்கு முன்பு தன்னுடன் நடித்த நடிகை உடன் தான் பேச வேண்டும் என்று மஞ்சு வாரியரிடம் ’துணிவு’ படப்பிடிப்பின்போது அஜித் கேட்டதாக பிரபல நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அஜீத் நடித்த ‘அசல்’ என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை பாவனா. இந்த நிலையில் நடிகை பாவனா சமீபத்தில் பேட்டி அளித்தபோது ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பார்த்து பேச வேண்டும் என்று மஞ்சு வாரியரிடம் அஜித் கேட்டதாகவும் இதனை அடுத்து மஞ்சு வாரியர் எனக்கு போன் செய்தபோது எனக்கு போன் ரீச் ஆகவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து சென்னைக்கு நான் வந்த போது ’துணிவு’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அஜித்தை பார்த்து பேசினேன் என்றும் அஜித் மற்றும் மஞ்சு வாரியருடன் நான் லஞ்ச் சாப்பிட்டு நீண்ட நேரம் பேசினோம் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அந்த நாளை என்னால் மறக்க முடியாது என்றும் அன்றைய தினம் எடுத்த புகைப்படத்தை தான் அஜித்தின் பிறந்தநாள் அன்று நான் என் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
எப்போவோ அஜித்துடன் நடித்த என்னிடம் பேச வேண்டும் என்று அஜித் அவர்களுக்கு அவசியமில்லை, ஆனால் இத்தனை வருடத்திற்கு பிறகு அவர் என்னை ஞாபகம் வைத்து நலம் விசாரித்தது சந்தோஷமாக இருந்தது. இந்த அன்பு தான் அவரை இவ்வளவு பேரை கொண்டாட வைக்கிறது என பாவனா தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments