நேர் கொண்ட பார்வை'க்கு முன் அஜித்துக்கு கிடைத்த வெற்றி!

  • IndiaGlitz, [Thursday,August 01 2019]

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'பிங்க்' படத்தின் ரீமேக் என்பதால் தமிழிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும், அதற்கு அஜித்தின் மாஸ் பெரிதும் கைகொடுக்கும் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த நிலையில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவை காவலர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பில் அஜித் 10 மீட்டர் பிரிவில் பங்கேற்றார். முதல் சுற்றில் 71 புள்ளிகள், இரண்டாம் சுற்றில் 79 புள்ளிகள், மூன்றாம் சுற்றில் 83 புள்ளிகள், நான்காம் சுற்றில் 81 புள்ளிகள் எடுத்தஅஜித் அடுத்த சுற்று தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த சுற்றில் கலந்து கொள்ள அஜித் மீண்டும் வரும் சனியன்று கோவை வரவுள்ளார்.

ஏற்கனவே மோட்டார் சைக்கிள், கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அஜித், சமீபத்தில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்தார் என்பதும் அவரது தலைமையில் எம்.ஐ.டியை சேர்ந்த தக்சா என்னும் மாணவர் குழு உலக அளவில் பிரபலம் ஆனது என்பதும் தெரிந்ததே

More News

நைட்டு 1.30 மணிக்கு நீங்க என்ன பண்ணினிங்க தர்ஷன்? நெட்டிசன்கள் கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை இன்று சக போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து சாக்சிக்கு ஆதரவாக பேசிய நிலையில் தர்ஷன் சற்றே அதிகம் உணர்ச்சிவசப்பட்டு நைட்டு 2 மணிக்கு

பிரபல இளம் இசையமைப்பாளருக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து

கோலிவுட் திரையுலகில் கடந்த சில வருடங்களாக இளம் இசையமைப்பாளர்களின் அறிமுகம் அதிகமாகி, இசையுலகில் வெற்றி பெற்று வருகின்றனர்.

'நேர் கொண்ட பார்வை' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போனிகபூர்

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 8 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டும்

ரஜினி, விஜய் ரசிகர்களின் கொந்தளிப்பால் வருத்தம் தெரிவித்த பிரபல இயக்குனர் 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டது இந்திய அளவில் டிரெண்ட் ஆன நிலையில் இன்று ரஜினி, விஜய் ரசிகர்கள் இணைந்து இயக்குனர் ராஜூ முருகனை

தனுஷ் படத்தில் நடிப்பது உண்மையா? ஹிருத்திக் ரோஷன் விளக்கம்

நடிகர் தனுஷ் தற்போது 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் விரைவில் ஆனந்த் ராய் இயக்கத்தில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக