நேர் கொண்ட பார்வை'க்கு முன் அஜித்துக்கு கிடைத்த வெற்றி!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'பிங்க்' படத்தின் ரீமேக் என்பதால் தமிழிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும், அதற்கு அஜித்தின் மாஸ் பெரிதும் கைகொடுக்கும் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன
இந்த நிலையில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவை காவலர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பில் அஜித் 10 மீட்டர் பிரிவில் பங்கேற்றார். முதல் சுற்றில் 71 புள்ளிகள், இரண்டாம் சுற்றில் 79 புள்ளிகள், மூன்றாம் சுற்றில் 83 புள்ளிகள், நான்காம் சுற்றில் 81 புள்ளிகள் எடுத்தஅஜித் அடுத்த சுற்று தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த சுற்றில் கலந்து கொள்ள அஜித் மீண்டும் வரும் சனியன்று கோவை வரவுள்ளார்.
ஏற்கனவே மோட்டார் சைக்கிள், கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அஜித், சமீபத்தில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்தார் என்பதும் அவரது தலைமையில் எம்.ஐ.டியை சேர்ந்த தக்சா என்னும் மாணவர் குழு உலக அளவில் பிரபலம் ஆனது என்பதும் தெரிந்ததே
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com