முன்னாள் முதல்வர் பேரனுடன் காதல்.. திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய அஜித் பட தயாரிப்பாளர்!
- IndiaGlitz, [Monday,December 26 2022]
அஜித் படத்தின் தயாரிப்பாளரின் மகள் முன்னாள் முதல்வரின் பேரனை காதலித்து வரும் நிலையில் இந்த திருமணத்திற்கு தயாரிப்பாளர் பச்சைக்கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.
அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ மற்றும் ’துணிவு’ ஆகிய மூன்று படங்களை தொடர்ச்சியாக தயாரித்தவர் போனிகபூர் என்பதும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவரான இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ’குட்லக் ஜெர்ரி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஜான்வி கபூர் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து வருவதை அடுத்து அவர் கிரிக்கெட் பயிற்சியும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியா என்பவரை ஜான்வி கபூர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷிகர் கலந்து கொண்ட நிலையில் அதே நிகழ்ச்சியில் மகளுடன் கலந்து கொண்ட போனிகபூர், ஷிகர் பஹாரியாவுடன் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ஜான்வி கபூர் காதலுக்கு அவரது தந்தை போனிகபூர் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.