ஷாலினி அஜித் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பி.ஆர்.ஓ!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் குறித்த முக்கிய தகவலை அஜீத்தின் பிஆர்ஓ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தல அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு ஷாலினியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் அஜீத் இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் கணக்குகள் வைத்திருக்கவில்லை என்றும் அவர் தனது ரசிகர்களுக்கு கூற வேண்டிய கருத்துக்களை தனது பிஆர்ஓ மூலம் கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அஜித் பெயரில் ஏராளமான போலி சமூக வலைதளப் பக்கங்கள் உலவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித் மனைவி ஷாலினி அஜித் பெயரிலும் கடந்த சில மாதங்களாக போலி டுவிட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அஜீத்தின் பிஆர்ஓ தனது டுவிட்டர் பக்கத்தில், ஷாலினி அஜித்குமார் பெயரில் எந்தவிதமான அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கும் இல்லை என்றும் அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கணக்கு போலியானது என்றும் எனவே அந்த கணக்குகளை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
There is a fake twitter account in the name of #MrsShaliniAjithkumar and we would like to clarify that she is not in twitter. Kindly ignore the same .
— Suresh Chandra (@SureshChandraa) February 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments