'துணிவு' படத்திற்கு புரமோஷனா? அஜித் தரப்பு கொடுத்த விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து முடித்துள்ள ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்றும் இந்த படத்தின் புரமோஷன் பணிக்கு அஜித் ஒப்புக்கொண்டால் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சி நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’ஒரு நல்ல திரைப்படம் தானாகவே புரமோஷன் செய்து கொள்ளும்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அஜித் ’துணிவு’ உள்பட எந்த படத்திற்கும் வழக்கம்போல் புரமோஷன் செய்யமாட்டார் என்று மறைமுகமாக கூறியதோடு, கடந்த சில மணி நேரங்களாக பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் உள்ளது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளதாகவும், லைகா தயாரிப்பில் அஜித் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
"A good film is promotion by itself!! - unconditional love!
— Suresh Chandra (@SureshChandraa) October 31, 2022
Ajith
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments