கார் ரேஸ்-க்கு தயாராகும் அஜித்.. சூப்பர் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உள்பட பலரும், அஜித் ஐரோப்பாவின் ஜிடி4 கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்து, வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஒரு பக்கம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் துபாயில் அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்ட காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

நடிகர் அஜித் ஏற்கனவே பல கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொண்டவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் கார் ரேஸ் போட்டியில் பங்கேற்க இருப்பதை கேட்டு, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருப்பதாகவும், அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

பிரபல நடிகரின் படத்தில் வில்லன்களாக நடிக்கும்  நட்சத்திர ஜோடி.. யார் அவர்கள்?

பிரபல நடிகரின் படத்தில் பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நடிகை பூஜா குமார் க்யூட் பதிவு..!

நடிகை பூஜா குமார் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்

எங்கள் மொத்த குடும்பமும் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எங்கள் மொத்த குடும்பமும் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததே இல்லை" என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு தற்போது

கேமிராமேனை பாராட்டியே ஆக வேண்டும்: சாயிஷா நடன வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை சாயிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்மையாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கேமராமேன் பாராட்டப்பட வேண்டும் என்பது

என்னாது Big Boss-க்கு போனா Divorce ஆ ஆ ஆ ? - வெங்கடேஷ் பட்

பிரபல சமையற் கலைஞரும், குக் வித் கோமாளியின் 1,2,3 & 4 சீஸனின் ஜட்ஜாக இருந்த வெங்கடேஷ் பட் Role Reversal என்ற பாணியில் குக் வித் கோமாளி புகழ் குரோஷியுடனாட நேர்காணலில்