அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்....! "அன்றே கணித்தார் தல அஜித்... வைரலாகும் வரிகள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
அன்னை தமிழில் அர்ச்சனை நடக்கும் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கடந்த ஆகஸ்ட்-1 ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை கூறியிருந்தார். தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் துவங்கப்படும். அதற்கு ஆரம்ப கட்டமாக சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், முதன் முதலாக அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படும்" என அறிவித்திருந்தார். அந்த வகையில் குறிப்பிட்ட கோவில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற பலகை வைக்கப்பட்டு, அதில் அர்ச்சகரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் ஆகஸ்ட்-3-ஆம் தேதி, கபாலீஸ்வரர் கோவிலில் "அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற பதாகையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த திட்டம் முதல்கட்டமாக 47 கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 2007 -ல் வெளியான தல அஜித்தின் "பில்லா" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் தான் சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா. இப்பாடலில் கூறப்பட்டுள்ள வரிகள் "அன்னை தமிழில் அர்ச்சனை" திட்டத்துடன் ஒத்துப்போவதாக, அந்த வரிகளை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
"ஏறுமலை ஏறு எங்க அண்ணன் அழகைபாரு
ஆறுமுகம் யாரு நம்ம நண்பந்தானே குரு
தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு"
என்ற கவிஞர் பா.விஜய் அவர்களின் வரிகள் தான் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது. இப்பாடலுக்கு யுவன் இசையமைக்க, விஜய் யேசுதாஸ் பாடியிருப்பார். ஆனால் தல அஜித் மூலமாக இந்த வரிகள் வெளியானதால், அவரது ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments