7 கண்டங்கள், 64 நாடுகள்: பைக்கில் பயணம் செய்ய அஜித் திட்டம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளில் பைக்கில் பயணம் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பதிவுசெய்துள்ள டுவிட் ஒன்றில் அஜித் குமார் Maral Yazarloo என்ற பெண்மணியை சந்தித்து உள்ளார். Maral Yazarloo என்பவர் தன்னந்தனியாக உலகை மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை சுற்றி வந்த அவரை அஜித் டெல்லியில் சமீபத்தில் சந்தித்து அவருடைய அனுபவங்களை கேட்டுள்ளார். மேலும் உலகம் முழுவதும் மோட்டார் பைக்கில் பயணம் செய்ய அவரது பரிந்துரைகளையும் அஜித் கேட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அஜித்தும் ஏழு கண்டங்களில் உள்ள 64 நாடுகளில் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
With Maral Yazarloo. Maral has traveled solo around the world on a motorcycle. She covered 7 continents and 64 countries.
— Suresh Chandra (@SureshChandraa) September 20, 2021
Ak met up with her in Delhi to know of her experiences and seek her suggestions to enable plan his motorcycle tour around the world in the coming future pic.twitter.com/60HsTs5Mo4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com