அஜர்பைஜானில் அஜித் செய்த தரமான சம்பவம்.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,December 15 2023]

அஜர்பைஜானில் அஜித் செய்த தரமான சம்பவம் குறித்த புகைப்படங்கள் அவருடைய மேனேஜரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அஜித் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் படக்குழுவினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை அவரே பிரேம் போட்டு பரிசாக அளித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

அந்த வகையில் அஜீத் எடுத்த ஒரு சில புகைப்படங்களை அவருடைய மேனேஜர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. குறிப்பாக அஜித் எடுத்த அர்ஜுன் புகைப்படம், மகிழ் திருமேனி, ரெஜினாவின் புகைப்படம் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.