தமிழக முதல்வரை சந்திக்க திட்டமிட்ட போனிகபூர்: அஜித் சொன்னது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வரை சந்திக்க தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அஜித் சொன்னதால் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து சமீபத்தில் தொலைகாட்சி படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து திரைப்பட படப்பிடிப்புக்கும் நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து உள்ளது. இது குறித்து விரைவில் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது ’வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் அஜித் அவர்கள் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பை இப்போதைக்கு தொடங்க வேண்டாம் என்றும் படக்குழுவினர்களில் பாதிகாப்பில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் கொரோனா பரவல் முழுவதும் நீங்கிய பின்னரே ’வலிமை’ படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்திதாக தெரிகிறது. இதனை அடுத்து முதல்வரை சந்திக்கும் குழுவில் இருந்து போனிகபூர் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்ட பின்னரே ’வலிமை’ படத்தின் படப்பிடிப்புக்கு அஜித் வருவார் என்று கூறப்படுகிறது. இது அவருக்காக மட்டுமின்றி படக்குழுவினர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுத்த முடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com