அஜித்தின் உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் எப்போது? சுரேஷ் சந்திரா அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக உலக சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்பதும் அவர் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

கடந்த ஆண்டு அவர் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்டார். அது மட்டும் இன்றி சமீபத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான் மற்றும் நேபாளம் நாடுகளிலும் பைக் டூர் சென்றுவிட்டார்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த உலக பைக் சுற்றுப்பயணம் நவம்பர் மாதம் தொடங்கும் என்று அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’சவாலான நிலப்பரப்புகளில் பைக் மூலம் சவாரி செய்து தீவிர வானிலையை அஜித் எதிர்கொண்டுள்ளார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்துள்ள அஜித் நேபாளம் மற்றும் பூட்டான் நாட்டையும் கடந்து சென்றார். இந்த நிலையில் உலக சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்ட பயணம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து அஜித் தனது ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நவம்பருக்குள் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வழக்கறிஞர் கேரக்டரில் ஸ்ருதி ரெட்டி.. ஹீரோ யார் தெரியுமா?

நடிகை ஸ்ருதி ரெட்டி, 'விசாரணை கைதி' என்ற படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தில் நட்டி நடராஜ் ஹீரோவாக நடித்த வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 

பாரதிராஜா முதல் இளையராஜா வரை… பிரபலங்கள் இணைந்த வெப் தொடர்… புதிய அறிவிப்பு!

காதலும் காமெடியும் கலந்து எடுக்கப்பட்டு உலகம் முழுக்கவே பிரபலமான ‘மாடர்ன் லவ்‘ வெப் தொடர் தற்போது தமிழிலும் வெளியாகவுள்ளது.

சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவுடன் காதலா? ஒருவழியா மௌனம் கலைத்த PS-நாயகி!

நடிகை சமந்தாவைவிட்டு பிரிந்ததில் இருந்தே நடிகர் நாகசைதன்யா பல்வேறு காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்த நிலையில் சமீபகாலமாக அவர் நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவருகிறார்

நன் அப்படிங்கற திமிரு வரவேகூடாது - வித்யாசாகர்

தமிழ் சினிமாவில் 1990 முதல் 2010 இறுதி வரை கொடி கட்டி பறந்த இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்

இதுவரை இல்லாத வித்தியாசமான மேக்கப்.. 'லியோ' படப்பிடிப்பில் அர்ஜூன்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது 'லியோ' படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள