close
Choose your channels

அஜித்தின் உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் எப்போது? சுரேஷ் சந்திரா அறிவிப்பு..!

Tuesday, May 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக உலக சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்பதும் அவர் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

கடந்த ஆண்டு அவர் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்டார். அது மட்டும் இன்றி சமீபத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான் மற்றும் நேபாளம் நாடுகளிலும் பைக் டூர் சென்றுவிட்டார்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த உலக பைக் சுற்றுப்பயணம் நவம்பர் மாதம் தொடங்கும் என்று அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’சவாலான நிலப்பரப்புகளில் பைக் மூலம் சவாரி செய்து தீவிர வானிலையை அஜித் எதிர்கொண்டுள்ளார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்துள்ள அஜித் நேபாளம் மற்றும் பூட்டான் நாட்டையும் கடந்து சென்றார். இந்த நிலையில் உலக சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்ட பயணம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து அஜித் தனது ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நவம்பருக்குள் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment