LCU போல் PCU.. அஜித்தின் 3 படங்களை இயக்கும் ரூ.1000 கோடி வசூல் பட இயக்குனர்..!
- IndiaGlitz, [Wednesday,July 24 2024]
லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போலவே பிரபல இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும் அவருடைய இயக்கத்தில் அஜித் தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்து உள்ள நிலையில் சிறுத்தை சிவா உள்பட ஒரு சில இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி ’கேஜிஎப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் அஜித்தின் 64வது படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி அஜீத்தின் 65வது படம், 66வது படம் என தொடர்ச்சியாக அஜித்தின் மூன்று படங்களை பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாகவும் இதில் ஒரு படம் ’கேஜிஎப்3’ திரைப்படத்துடன் கனெக்ட் ஆகும் வகையில் இருக்கும் இடம் கூறப்படுகிறது. எனவே பிரசாந்த் நீல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படமாக அஜித்தின் அடுத்த படங்கள் உருவாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த திரைப்படம் டிராப் ஆன போது, அஜித்தின் படத்தை பிரசாந்த் நீல் இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது அவர் ’சலார்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்ததால் அவரால் அஜித் படத்தை ஒப்புக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது இருவரும் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தென்னிந்திய திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.