அஜித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,March 09 2016]

தல அஜித் நடித்த 'வேதாளம் வெற்றிப்படத்தை அடுத்து அவருடைய அடுத்த படம் எப்போது தொடங்கும் என ஆவலுடன் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளிவந்துள்ளது. 'வேதாளம்' படத்திற்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் அஜித், அடுத்ததாக மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.


சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏப்ரல் 16ஆம் தேதி வெளிவரவுள்ளதாகவும், இந்த படம் ஜுன் மாதம் ஆரம்பித்து மூன்றே மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தல அஜித் இந்த படத்தில் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தின் ஹீரோயின் மற்றும் நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி விஜய்யின் 'தெறி' ரிலீஸ் ஆகும் நிலையில் இரண்டே நாள் இடைவெளியில் அஜித்தின் பட அறிவிப்பு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தெறி'யின் முதல்கட்ட டிராக் லிஸ்ட்

இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளது என்பதை சற்று முன்னர் பார்த்தோம்...

இந்திய திரையுலகில் இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த் 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய...

விஜய்யின் 'தெறி' பாடல்கள் குறித்த முக்கிய தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

'இறுதிச்சுற்று' கதையை திடீரென மாற்றிய இயக்குனர்.

மாதவன், ரித்திகாசிங் நடிப்பில் சுதா இயக்கத்தில் சமீபத்தில் தமிழ், மற்றும் இந்தியில் வெளியான 'இறுதிச்சுற்று' திரைப்படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்...

ஹாலிவுட் பட ரீமேக்கில் நயன்தாரா?

கடந்த 2009ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆன த்ரில் திரைப்படம் 'ஆர்பன்'. இந்த படத்தில் ஒரு குழந்தை பேயாக நடித்திருக்கும்...