அஜித்தின் அடுத்த படத்தில் இரண்டு 90s ஹீரோயின்கள்? இருவரும் அஜித் ஜோடியாக நடித்தவர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கடந்த 90களில் பிரபலமாக இருந்த இரண்டு நடிகைகள் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு குறித்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது 90s நடிகைகளான சிம்ரன் மற்றும் மீனா ஆகிய இருவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
நடிகை சிம்ரன் ஏற்கனவே அஜித் உடன் ’வாலி’ ‘அவள் வருவாளா’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும், அதேபோல் நடிகை மீனாவும் அஜித் உடன் ’சிட்டிசன்’ ’வில்லன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அஜித் மூன்றுவித கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாகவும் ’குட் பேட் அக்லி’ ஆகிய மூன்று குணங்களுடன் அந்த கேரக்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments