அஜித்தின் அடுத்த பட இயக்குனர் மாற்றப்பட்டாரா? உண்மை நிலை என்ன?

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தெலுங்கு திரையுலகின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த செய்தி கிட்டத்தட்ட உண்மை என்று சமூக வலைதளங்களில் அஜித் தரப்பிலும் கசிந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வேறு ஒரு தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன.

சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோக்களில் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சிலர் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறினர்.

ஆனால் அஜித்தின் தரப்பிலிருந்து இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது. அஜித்தின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லை என்றும் இயக்குனர் மாற்றப்பட்டதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் தவறானது என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குபவர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

விஜயகாந்த் உடல்நிலை குறித்த அதிர்ச்சி தகவல்.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து

'சிறகடிக்க ஆசை': திடீரென மீனாவை பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளர்கள்.. முத்து அதிர்ச்சி..

'சிறகடிக்க ஆசை' சீரியலில் திடீரென மீனாவை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க குவிந்ததை பார்த்து முத்து அதிர்ச்சி அடைந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன.

இந்தாம்மா ஏய்.. குணசேகரன் வீட்டு மருமகளா இவர்? 'எதிர்நீச்சல்' நடிகையின் பீச் புகைப்படங்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில்  புடவை காஸ்டியூம் அணிந்து குடும்பப்பாங்கான ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா தாய்லாந்தில் எடுக்கப்பட்ட கிளாமர் புகைப்படங்களை

அடிங்க பார்ப்போம், தைரியம் இருந்தா அடிங்க பார்ப்போம்.. ஓவியாவை ஞாபகப்படுத்திய அர்ச்சனா..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக விஷ்ணு மற்றும் அர்ச்சனா இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது என்பதும் இருவரும் காரசாரமாக வாதிட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்

'பருத்தி வீரன்' பிரச்சனை.. மெளனம் கலைத்த ஞானவேல்ராஜா.. அறிக்கை வெளியீடு..!

 கார்த்தி நடிப்பில், அமீர் இயக்கத்தில் உருவான 'பருத்தி வீரன்' என்ற திரைப்படம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் பிரச்சினை குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அமீர்