புத்தாண்டு கொண்டாட்டம்: ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்ட அஜித்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது என்பதும் தமிழ் திரையுலகினர் பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பதும் தெரிந்ததே
அந்த வகையில் அஜித் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ’ஆலுமா டோலுமா’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஹைதராபாத்தில் தற்போது ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பின்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை அஜித் ’வலிமை’ படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.
இது குறித்து நடன குழுவில் உள்ள ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் அவர் இதுகுறித்து பதிவு செய்துள்ளதாவது: 2021 ஆம் ஆண்டு என் வாழ்வில் இப்படி ஒரு புத்தாண்டு தினத்தை கொண்டாடுவோம் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சரியாக 12 மணிக்கு தல அஜித் பக்கத்தில் நின்று இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டேன். அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதும் அதன்பின்னர் ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு அவருடன் சேர்ந்து ஆடியதும் மறக்க முடியாது. இது எனக்கு வேற லெவல் உணர்வாக இருந்தது
என் வாழ்க்கையில் இப்படி ஒரு புத்தாண்டு இதுவரை வந்தது கிடையாது. இதற்காக நான் கடவுளிடம் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார். இதிலிருந்து அஜித் ’வலிமை’ படக்குழுவினருடன் ’ஆலுமா டோலுமா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி புத்தாண்டை கொண்டாடி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com