புத்தாண்டை கொண்டாட குடும்பத்துடன் வெளிநாடு சென்ற அஜித்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில், புத்தாண்டை கொண்டாட பல உலக பிரபலங்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். குறிப்பாக, விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதிகள் துபாய்க்கு புத்தாண்டு கொண்டாட சென்றுள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
அதேபோல், தனுஷ் உள்பட பல தமிழ் திரை உலக பிரபலங்கள் வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில், அஜித்தும் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அஜித் தனது குடும்பத்துடன் வந்த காட்சி, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த காட்சிகள் உள்ளிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே, அவர் நடித்து வரும் "விடாமுயற்சி" மற்றும் "குட் பேட் அக்லி" ஆகிய படங்களின் படப்பிடிப்பையும், டப்பிங் பணியையும் முடித்துவிட்டதால், தற்போது அவர் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாட செல்கிறார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, அவர் கார் ரேஸ் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Buzz : AJITH Sir in Singapore To Spend This New Year With His Family !! ✨❤️🔥 pic.twitter.com/epaDjWIAOs
— Citizen Da (@ssiraj1986) December 31, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments