20 வருடங்களுக்கு முந்தைய அஜித்தின் லுக்: 'அஜித் 61' கெட்டப்பா?

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை அண்ணா சாலை போன்ற செட் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை ’மணிஹெய்ஸ்ட்’ வெப்தொடர் போல ஒரு வங்கி கொள்ளையடிக்கப்படும் கதை என்றும் இதில் கொள்ளைக்காரன் மற்றும் போலீஸ் ஆகிய இரண்டு கேரக்டரில் அஜித் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

கொள்ளைக்காரன் கேரக்டரில் அஜித் சற்று வயதான தோற்றத்தில் இருப்பது போலவும் போலீஸ் கேரக்டரில் அஜித் இளமையாக இருப்பது போன்றும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். இளமை தோற்றத்திற்காக அஜித் 25 கிலோ எடையை குறைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் இளமை புகைப்படம் ஒன்று திடீரென இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 20 வருடங்களுக்கு முந்தைய அஜித் போன்று கண்ணாடி, வித்தியாசமான ஹேர்ஸ்டைல் என பட்டையை கிளப்பும் இந்த லுக் தான் ‘அஜித் 61’ கெட்டப்பா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.