ரேஸ் காரில் மாஸ் காட்டும் அஜித்.. வேற லெவல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிற்காக அஜித், அஜர்பைஜான் சென்று இருக்கும் நிலையில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாரோ இல்லையோ, கார் ஓட்டுவதிலும் கார் ரேசில் கலந்து கொள்வதிலும் பிஸியாக இருக்கிறார் என்பது அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
இன்று காலை ஏற்கனவே அவர் ரேஸ் கார் ஓட்டிய வீடியோ வெளியான நிலையில், சற்றுமுன் இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் கார் பயிற்சியாளர் சொல்லும் குறிப்புகளை கேட்டுக்கொண்டு, அதன் பின் கையில் கிளவுஸ் மற்றும் ஹெல்மெட் அணிந்து கொண்டு, ரேஸ் காரில் உட்கார்ந்து அவர் கார் ஓட்டும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவில் அஜித் மாஸாக கார் ஓட்டும் காட்சியைப் பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
விஜய் நடித்த ’கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அதே அளவுக்கு அஜித்தின் வீடியோவும் தற்போது ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நடக்கிறதோ இல்லையோ அஜித்தின் கார் ரேஸ் குறித்த பணிகள் கச்சிதமாக நடந்து வருவதாக நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பின் போதும் அஜித் மற்றும் ஆரவ் இணைந்து எடுத்த செல்பி புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து ஒரு பக்கம் படப்பிடிப்பும் நடந்து வருகிறது என்பது உறுதி ஆகியுள்ளது.
Ajith sir driving race car video.
— Ajith | Dark Devil (@ajithFC) June 22, 2024
| video: Joshith | @arianoarun | #AK #Ajith #Ajithkumar | #VidaaMuyarchi | #GoodBadUgly | pic.twitter.com/RUi78YaI06
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com